90 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'கோல்டன் ஸ்பாரோ'
Nov 29, 2024, 16:08 IST
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றத. இருப்பினும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியானது.