100 மில்லியன் பார்வைகளை கடந்த "கோல்டன் ஸ்பேரோ" பாடல்
கோல்டன் ஸ்பேரோ பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில் நடிகர் தனுஷுக்கு, ஜி.வி. பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தினை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்ககளத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதிலும் கோல்டன் ஸ்பேரோ – GOLDEN SPARROW எனும் பாடல் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியிருப்பார். இந்தப் பாடலை தனுஷ், ஜிவி பிரகாஷ், அறிவு, சுபலாஷினி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.