×

`Singing டூயட்டு வேற யாரோ' - Golden Sparrow பாடல் வெளியீடு

 
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார். கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். பாடல் புது வைப் செய்யும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. <a href=https://youtube.com/embed/AAq06bS8UZM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/AAq06bS8UZM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">