‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூல்... அஜித் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை...!
‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூல், அஜித் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(10.04.2025) வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் முதல் நாளில் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளர் தயாரிப்பாளர் ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.