இணையத்தில் வைரலாகும் 'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ...!

 
ak

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள  'குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.