×

‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓ.டி.டி. அப்டேட் 

 

அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தின்  ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் பெருவாரியான அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வருகிற 8ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது