‘குட் பேட் அக்லி’ ரிலீஸ்... ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஷாலினி அஜித்...!
Apr 10, 2025, 13:39 IST
‘குட் பேட் அக்லி’ படம் வெளியான நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஷாலினி அஜித் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியது.
இந்த நிலையில் இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேலதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.