'குட் பேட் அக்லி' ரிலீஸ்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!
அஜித்குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட்-பேட்-அக்லி என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் லைகா தயாரிக்க த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பின்வாங்கிவிட்டது. பிப்ரவரியில் வெளியாகலாம் என திரை வட்டாரங்கள் சொல்கின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு அடுத்த படமாக உருவாகி வரும் குட்-பேட்-அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. இப்படத்தில் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அஜித் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு பின்பு பின்வாங்கியது. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.