குட் பேட் அக்லி படத்தின் தெலுங்கு & இந்தி டீசர் இன்று மாலை ரிலீஸ்
Updated: Mar 1, 2025, 18:08 IST
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.அஜித்குமார் விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே கமிட் ஆன திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படத்தில், அஜித்தின் தோற்றமும், அவரது கெட்டப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.