×

தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் ‛குட் பேட் அக்லி'

 

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள ‛குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம்  ‛குட் பேட் அக்லி' . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.   250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்தை தமிழகத்தில் மட்டுமே 1000 தியேட்டர்களில் வெளியிடுவதோடு, உலக அளவிலும் அஜித்தின் முந்தைய படங்களை விடவும் அதிகப்படியான தியேட்டரில் வெளியிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

<a href=https://youtube.com/embed/jl-sgSDwJHs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/jl-sgSDwJHs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

 இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் டிரைலர் இந்த மாதம் இறுதியில் வெளியாக உள்ளது.