×

‘குட் நைட்’ அடுத்த பாடல் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு !

 

‘குட் நைட்’ படத்தின் அடுத்த பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘குட் நைட்’. ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.

இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/scLVrC8ZqI4?autoplay=1&mute=1&start=10><img src=https://img.youtube.com/vi/scLVrC8ZqI4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">