×

ஓடிடியில் வெளியாகும் ‘குட் நைட்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘ஜெய் பீம்’ படத்தின்  கதாநாயகன் நடிகர் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’.  இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார்.

 இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.  ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

குறட்டை ஒரு இளைஞன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இந்த படம். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 3-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.