×

கிரவுட் ஃபண்டிங் பணம் என்ன ஆனது? – தங்களது இரண்டாவது பட பூஜையில் விளக்கம் கொடுத்த கோபி, சுதாகர்.

 

யூஸ்டியூபில் பரிதாபாங்கள் என்ற சேனல் மூலமாக நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், அரசியல் செயல்பாடுகள் என அனைத்தையும் தங்களுக்கே உரிய பாணியில் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்து வந்த கோபி, சுதாகர். கடந்த சில வருடத்திற்கு முன்பு கிரவுட் ஃபண்டிங் முறையில் படம் எடுக்க போவதாக கூறி தங்கள் பாலோவர்களிடம் இருந்து பணம் வசூலித்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதியும் கிடைத்தது. அந்த பணத்தை வைத்துக்கொண்டுஹே மணி கம் டுடே, கோ டுமாரோஎன்கிற படத்தை எடுக்க உள்ளதாகவும் அறிவித்தனர். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

படம் குறித்த அப்டேட்டுகளை பணம் கொடுத்தவர்களிடம் பகிர்ந்து வந்த இந்த காம்போ, விரைவில் படத்தை தொடங்கி விடுவோம் என கடந்த அகஸ்ட் மாதம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று தங்கள் இரண்டாவது படத்திற்கான பூஜையை தொடங்கியுள்ளனர். பெயரிடப்படாத இந்த படத்தை  புதுமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்க உள்ளதாகவும், விக்னேஷ் என்பவர் அப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்து பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.

தொடர்ந்து படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கோபி சுதாகர் பேசுகையில், முதல் படம் பட்ஜெட் அதிகமானதால் அதனை கிடப்பில் போட்டுவிட்டு, எங்களை நம்பி பணம் கொடுத்தவர்களுக்காக  இந்த இரண்டாவது படத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர். இதன் மூலமாக ஹே மணி கம் டுடே, கோ டுமாரோபடம் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.