×

லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

 

லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்து, ஆணை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. வரும் 19-ம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி