×

கெளதம் கார்த்திக்கின் நடிப்பில் 'ஆகஸ்ட் 16 1947' ... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

 கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆகஸ்ட் 16 1947' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947 ’. இந்த படத்தில் ரேவதி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்டக்களத்தின் ஒரு பகுதியே இப்படத்தின் கதையாக உருவாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிரொக்ஷன், பர்பிள் புல் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் காட் ப்ளஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.  இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். 

ப்ரீயட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ஏப்ரம் 7-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.