×

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த பிரம்மாண்டத் திருமணம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் ஆர்கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தப் படத்தில் பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இருவரும் திருமணம் நடைபெறுவது போல காட்சி இடம் பெறுகிறது. இதற்காக சென்னை புறநகர் பகுதியில்
 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் ஆர்கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தி கிரேக் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்தப் படத்தில் பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இருவரும் திருமணம் நடைபெறுவது போல காட்சி இடம் பெறுகிறது.

இதற்காக சென்னை புறநகர் பகுதியில் ஒரு பெரிய வீடு காரைக்குடி பகுதியில் உள்ள அரண்மனை போல மாற்றப்பட்டிருக்கிறது. முழு வீடும் வண்ண வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கப் பெற்றுள்ளது. இவ்வாறு பிரம்மாண்ட திருமணக் கோலத்தில் வீட்டை அலங்கரித்து அவர்கள் திருமணக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

நாடு பல முன்னற்றங்களை அடைந்துள்ள இந்த நவீன காலத்திலும் பல பெண்கள் திருமணத்திற்குப் பிறகு சமையல் அறையில் காலம் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை இந்தப் படம் பேசுகிறது.

நடிகர் யோகிபாபுவும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.