×

‘சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்’ – நாங்குநேரி விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் கண்டனம்.

 

நெல்லை நாங்குநேரியில் பள்ளியில் ஏற்பட்ட சாதி ரீதியான மோதல் காரணமாக பட்டியலின மாணவர் மற்றும் அவரது தங்கையை; சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இச்செயலுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வருபவர் முனியாண்டி இவருக்கு சின்னதுரை என்ற மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சகமாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சின்னதுரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளியிலிருந்து சின்னதுரையின் பெற்றோரை தொடர்புகொண்ட நிர்வாகத்தினர் அவரை பள்ளிக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர். அதனால் மாணவரும் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் சில மாணவர்கள் சின்னதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் சின்னதிரையின் வீடு புகுந்து சகமாணவர்கள் அரிவாளால் அவரை  வெட்டியுள்ளனர், அதை தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையையும் வெட்டியுள்ளனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் 6 மாணவர்களை கைது செய்து  நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், செய்தியை அறிந்த ஜி.வி பிரகாஷ் “தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன், சாதிதான் சமூகம் என்றால வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.