×

ஜி.வி. பிரகாஷ் - கயாடு லோஹர் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!
 

 

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் -கயாடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்  ஜி.வி.பிரகாஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், மு.மாறன் இயக்கத்தில் ‘Blackmail’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.