×

பிரபல நடிகரின் தங்கை ஹூரோயினா ? காடுகளில் படமாக்கப்படும் வெற்றிமாறன் படம் !

வெற்றிமாறன் படத்தில் ஹூரோயினாக பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அசுரன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரியை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். பல வருடங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் பாரதிராஜா புரட்சியாளர் கேரக்டரில் நடிக்க இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால், அவர் இப்படத்திலிருந்து
 

வெற்றிமாறன் படத்தில் ஹூரோயினாக பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அசுரன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரியை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். பல வருடங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. இதில் பாரதிராஜா புரட்சியாளர் கேரக்டரில் நடிக்க இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

நடிகர் சூரி போலீஸ்காரராக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வருகிறது. பாரதியராஜா விலகிய அந்த கேரக்டரில் நடிகர் கிஷோர், விஜய் சேதுபதி உள்ளிள்ள யாரேனும் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூரிக்கு ஜோடியாக நடிக்க பவானி ஸ்ரீ ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்துள்ளார். பவானி ஸ்ரீ, பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.