ஜிவி பிரகாஷ் - கௌரி கிஷன் இணைந்து நடித்துள்ள அடியே’... டிரெய்லர் குறித்த முக்கிய அப்டேட்
Aug 6, 2023, 20:33 IST
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'96' பட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஜிவி பிரகாஷ் படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.