×

25-வது திரைப்படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்
 

 

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தனது 25-வது படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இசையமைப்பாளர் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார் 100- வது திரைப்படத்தை விரைவில் எட்டயுள்ளார். அதேபோல், நடிகராக 25வது படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'கிங்ஸ்டன்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கமல் பிரகாஷ் இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷூடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. மேலும், படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும என்று எதிர்பார்க்கப்படுகிறது.