ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்' பட டிரெய்லர் அப்டேட்...!
Feb 25, 2025, 20:46 IST
ஜி.வி. பிரகாஷ் நடித்த 'கிங்ஸ்டன்' படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியாகி உள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.