×

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 

பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், இசை மட்டுமன்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது, நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். 

இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் என்ற திரைப்படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.