×

ஜி.வி.பிரகாஷ் ,கயாடு லோஹர் நடித்திருக்கும்  ‘இம்மார்ட்டல்’-என்ன கதை தெரியுமா ?

 

மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ள படம், ‘இம்மார்ட்டல்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் ஜோடியாக நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஏ.கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார்.  இப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியதாவது: இந்த படம் இந்திய திரையுலகிற்கு ஒரு புதிய ஜானராகவும், ஹாலிவுட் படங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இயக்குனர் கதை சொல்லும்போது, ஹாலிவுட் படம் மாதிரி இருந்தது.

தமிழ் திரையுலகில் ஒரு புது முயற்சியாக இருக்கும். சாம் சி.எஸ் மிகச்சிறந்த பின்னணி இசையையும், பாடல்களையும் வழங்கியுள்ளார். கயாடு லோஹர் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், இதுதான் அவரது கரியரில் பெஸ்ட் படமாக இருக்கும். 4 ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையும், இன்றைய காதலும் எப்படி சொல்லப்படுகிறது என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.