×

எச்.வினோத் - கமல் கூட்டணி படம் கைவிடப்பட்டதாக தகவல்

 

‘விக்ரம்’ படத்திற்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடிகர் கமல் நடித்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முடித்து உடனடியாக எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கமல் இணைவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக மொத்தம் 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். அதனால் படத்தை விரைவாக முடிக்க எச்.வினோத் திட்டமிட்டிருந்தார். ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சிறிய பட்ஜெட்டிலேயே தயாரிக்கவுள்ளனர் என்ற தகவலும் வெளியானது. 

இந்நிலையில், எச். வினோத் இயக்கும் திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், இந்த திரைப்படங்களை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், எச். வினோத் படம் இடம்பெறவில்லை.