×

லேட்டஸ்ட் தகவல்: ‘தங்கலான்’ பட ரிலீஸ் தேதி!....

 

சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வந்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில், டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம். அதுமட்டுமல்லாமல் படத்தில் அவருக்க வசனமே இல்லையாம்.

இந்த நிலையில் படம் வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளிப்போகிறது. அதன்படி படம் அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி தினத்தன்று வெளியாகு என நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.