×

"மீண்டும் அதிக படங்களில் நடிப்பேன்" என்று சவால் விடும் ஹன்சிகா

 

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, நேற்று முன்தினம் தனது 35வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். கடந்த 2022ல் மும்பை தொழிலதிபரும், தனது நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரியாவை காதல் திருமணம் செய்தார். பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட அவர், குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வாழ முடிவு செய்து, கடந்த 2025ல் அவரை விவாகரத்து செய்தார். பிறகு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட ஹன்சிகாவுக்கு மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார்கள்.

கடந்த 2003ல் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பிறகு நம்பர் ஒன் ஹீரோயின்களில் ஒருவராக மாறினார். தற்போது திரையுலகில் அவருக்கு சற்று இறங்குமுகமாக இருந்தாலும், மீண்டும் அதிக படங்களில் நடிப்பேன் என்று சவால் விடுகிறார். பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து அவர் கூறுகையில், ‘இந்த பிறந்தநாள் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அமைதியாகவும், மனதுக்கு நிம்மதியாகவும், அதிக நன்றியுணர்வுடனும் இருந்தது. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், மனதுக்கு பிடித்த சிலருடன் எனது பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடினேன்.