×

சினேகன் - கன்னிகா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி...!

 
பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா தம்பதியினர் மகிழ்ச்சி செய்தி ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் எழுதிய பாடல்களான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களாகும்.சினேகன் திருமணம் செய்துகொண்ட நடிகை கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாண வீடு' தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  மேலும் 'தேவராட்டம்', 'ராஜவம்சம்' படங்களிலும் முக்கிய வேடங்களில்  நடித்திருந்தார். 
சினேகனுக்கும், சின்னத்திரை நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.   null
 சினேகன் - கன்னிகா தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பிறக்கப்போவதாக சின்னத்திரை நடிகை கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில், அவர்,”நாங்க அப்பா அம்மா ஆகபோறோம். உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.