×

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

 

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பவன் கல்யாண் நடிப்பில் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கினார். இதனால் பவன் கல்யாண் குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு சென்றார்கள். இதனால் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் டப்பிங் பணிகள் எதிலுமே பவன் கல்யாண் கலந்துகொள்ளவில்லை. இதனை முன்னிட்டு படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.