×

தோனி தயாரித்துள்ள முதல் தமிழ் படம்.. ‘LGM’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 
தோனி தயாரித்துள்ள ‘LGM’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்த நடித்துள்ள திரைப்படம் ‘எல்ஜிஎம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி்யுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.  மேலும் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்க்ளில் நடித்துள்ளனர். அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 28-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி சூப்பரான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.