×

நாளை வெளியாகும் ‘எல்ஜிஎம்’ டீசர்.. ஹரிஷ் கல்யாண் படத்தின் முக்கிய அப்டேட் 

 

 ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்‘ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘எல்ஜிஎம்’ (LGM) திரைப்படம் உருவாகி வருகிறது. அம்மா மற்றும் காதலி இடையே அல்லல்படும் இளைஞர் கதைதான் இந்த படம். ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

 

இந்த படத்தில் நடிகை இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய், தீபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி் வருகிறார்.  

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நம்ம தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இணைந்து வெளியிடுகின்றனர். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.