×

‘லிஃப்ட்’ பட இயக்குநருடன் கைகோக்கும் ஹரிஷ் கல்யாண்!

 

 ‘லிஃப்ட்’ பட இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லப்பர் பந்து’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, விக்னராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் ஹரிஷ் கல்யாண். இதனை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை முடித்தவுடன், ‘லிஃப்ட்’ இயக்குநர் வினித் வீர பிரசாத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘லிஃப்ட்’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் இயக்குநர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, ஹரிஷ் கல்யாண் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். வினித் வீரபிரசாத் படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் செம்பன் வினோத்தும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் - செம்பன் வினோத் ஆகியோருடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.