×

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

 

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல குணசித்திர நடிகராக இருப்பவர் ஹரிஷ் உத்தமன். அவர் முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘நூடுல்ஸ்’. ‘அருவி’, ‘கர்ணன்’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மதன், இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘மண்டேலா’ படத்தின் நடிகை ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் ஆலியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். 

இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் படத்தில் என்ன நடக்கிறது என்பது இந்த படத்தின் கதை, இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் போஸ்டர் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.