துருவ நட்சத்திரம் அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்...!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் ரிலீஸ் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் ஆனால் அதன் பின் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அதைத்தொடர்ந்து விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அண்மையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனைக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.