×

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ்,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா
 

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மோகன் பாபு, பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ்,
காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி OTTயில் படம் ரிலீஸாக உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், ‘மண்ணுருண்ட மேல ’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. ஏகாதசி எழுதிய இந்தப் பாடலை, செந்தில் கணேஷ் பாடியுள்ளார். இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘கீழ்சாதி
உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வரிகள் சாதிப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், 2022ஆம் ஆண்டு வரை படத்துக்கு தடை விதிக்கக்கோரி தர்மபுரியைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளரிடம் கார்த்திக் என்பவர் புகார் அளித்தார். ஆனால், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி இளந்திரையன் முன்பு இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார், காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறுபடியும் புகார்
அளிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்தப் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.