வந்தான்.. சுட்டான்... செத்தான்... ரிப்பீட்... ரீ-ரிலீஸ் ஆகிறது சிம்புவின் மாநாடு.. 

 
simbu

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளது. 


கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மாநாடு. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

simbu

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. ’மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.