‘அயோத்தி’ டைரக்டர் ஆர்.மந்திரமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கும் ஹீரோ -யார் தெரியுமா ?
May 30, 2026, 06:00 IST
அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய மு.மாறன், தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் எழுதி இயக்கியுள்ள படம், `அப்பா குட்டி’. பிரீத்தி அஸ்ரானி, லிதான்யா, பக்ஸ், ஹரிப்பிரியா, மதன், சித்ரா லட்சுமணன், ஜா ரவி, முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணாறு ரமேஷ் நடித்துள்ளனர்.
வழக்கமாக கிரைம் திரில்லர் படங்களை எழுதி இயக்கும் மு.மாறன், இப்படத்தில் தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து, அதிரடி ஆக்ஷனுடன் கூடிய பேமிலி எண்டர்டெயினர் கதையை எழுதி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து, ‘அயோத்தி’ ஆர்.மந்திரமூர்த்தி இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.