×

இந்த படத்தை எப்படி எடுத்தாங்கன்னு யோசிக்க வைக்கும் - தலைவாசல் விஜய்

 

ஹிப்ஹாப் தமிழா கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது. அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார். இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியானது. படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

<a href=https://youtube.com/embed/w9JVJ88Zj0U?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/w9JVJ88Zj0U/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் கதாப்பாத்திரத்தை பற்றியும், படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி கூறியுள்ளனர். படக்குழு மிகப் பெரியளவில் முயற்சியையும் , கடின உழைப்பை செலுத்தியுள்ளனர். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.