×

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு' - கடைசி உலகப் போர் படத்தின் ப்ரோமோ சாங்  
 

 

 ஹிப்ஹாப் ஆதி கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது. தற்பொழுது அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார். இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. ஆதி நடிக்கும் 8 வது திரைப்படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

<a href=https://youtube.com/embed/XpR9oI5phLE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/XpR9oI5phLE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இப்பாடலை சின்ன பொன்னு, ஹிப்ஹாப் ஆதி, ராஜன் செல்லையா இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் பெப்பியாகவும், எனர்ஜட்டிக்காக இருக்கிறது. பாடலுக்கு இடையே வரும் படத்தின் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாகவும். அதிரடி ஆக்ஷனாக அமைந்து இருக்கிறது.இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.