×

கோவை மற்றும் சென்னையில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி... எப்போது தெரியுமா? 
 

 


'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை நிகழ்ச்சிகளை கோவை மற்றும் சென்னையில் நடத்த உள்ளார்.தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும்  இருக்கிறார்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, 'டக்கர்' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.கோவையில் வரும் செப்டம்பர் 8ம் தேதி ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.

கோவையில் முதல் முறையாக ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரி கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இவர், 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகரமாக இசைக் கச்சேரி நடத்தி உள்ளார். இந்த நிலையில் கோவையை சொந்த ஊராக கொண்ட இவர், அங்கு முதல் முறையாக தன் இசைக் கச்சேரியை கொடிசியா மைதானத்தில் நடத்த உள்ளார். சென்னையில் வரும் செப்டம்பர்21ம் தேதி ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.