×

பள்ளி பருவ நினைவுகள் பேசும் 'பப்பர மிட்டா' பாடல்.. 'வீரன்' செகண்ட் சிங்கிள் !

 

 ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'வீரன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 

‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வீரன்'. இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார். விரைவில் வெளியாக இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார். 

இப்படம் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பப்பர மிட்டா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆதி மற்றும் வைசாக் இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஆதியே இசையமைத்துள்ளார். விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதிய பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

<a href=https://youtube.com/embed/r_0HxtaiHTg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/r_0HxtaiHTg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">