"எனக்கு உறுதுணையாக இருந்த சுந்தர்.சி, குஷ்புவுக்கு எனது நன்றி"-ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கி இசை அமைத்து நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ என்ற படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது: ‘மீசைய முறுக்கு’ படம், என் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஒரு பயோபிக். ‘மீசைய முறுக்கு 2’ படம், அதைவிட மிகவும் பரந்த கதைக்களம் கொண்டது. இது இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையை பற்றிய உலகளாவிய கதை.
இசையை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை பற்றி பேசுகிறது. கானா கலைஞர்களின் உலகமும், அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் எனது தந்தையாக, மறைந்த விவேக் சார் நடித்திருந்தார். 2வது பாகத்தில் பாபா பாஸ்கர் நடித்துள்ளார். ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஆச்சர், லைலா சிங் என்ற நடனக்கலைஞர் கேரக்டரில் கெட்டிகா சர்மா நடித்துள்ளனர். இப்படத்தை உருவாக்கி, மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு உறுதுணையாக இருந்த சுந்தர்.சி, குஷ்புவுக்கு எனது நன்றி.