×

 ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘வீரன்’ ரிலீஸ் எப்போது ? ... புதிய அப்டேட் 

 
 ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகும் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஹிப்ஹாப் பாடல்கள் மூலம் பிரபலமான ஆதி, தற்போது நடிகராக கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார். ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வருகிறார். 

இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார்.  ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. 

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.