அசத்தலாக வருகிறான் ‘வீரன்’.. ஹிப்ஹாப் தமிழா ஆதி பட டிரெய்லர் குறித்த அறிவிப்பு !
ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரன்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கியுள்ளார். ஃபேன்டஸி காமெடி, ஆக்ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் மே 20-ஆம் தேதி வெளியாகிறது.