இலங்கையில் ஹிப்ஹாப் தமிழாவை சூழ்ந்த ரசிகர்கள்...!
Mar 16, 2025, 14:30 IST
இலங்கையில் தனது இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட சென்ற இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப்ஹாப் தமிழா. இசையமைப்பது மட்டுமல்லாமல் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் கடைசி உலகப்போர் இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து இருந்தார்.