ஹிப்ஹாப் தமிழாவின் அப்டேட் வந்தாச்சு.. கடைசி உலகப் போர் இந்தியில் அக் 4ல் ரிலீஸ்!
ஹிப்ஹாப் தமிழா இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்த 'கடைசி உலகப் போர்' படம் இந்தியில் வரும் அக் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில், முதல் முறையாக ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா எழுதி, இயக்கி, இசையமைத்துள்ள திரைப்படம் "கடைசி உலகப்போர்". மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளை பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த இப்படம் கடந்த செப் 20ம் தேதி தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷரா RA, FJ, குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.