×

செகண்ட் சிங்கிளாக உருவாகியுள்ள “பப்பர மிட்டா”... ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘வீரன்’ அப்டேட் !

 

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரன்’ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’.  ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார். 

 இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படம் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வரும் மே 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.