'ஹிட் 3' படத்தின் முதல் பாடல் வெளியீடு...!
Apr 2, 2025, 19:49 IST
நானி நடிக்கும் 'ஹிட் 3' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது ஹிட் 3 படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.