×

 'ஹிட் 3' படத்திற்கு A சான்று வழங்கிய தணிக்கை குழு...

 

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்திற்கு தணிக்கை குழு  A சான்று வழங்கியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது 'ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.