×

ஹிட்லர் திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட்

 

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் தனா எழுதி இயக்கிவரும் படம் ‘ஹிட்லர்’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். கதாநாயகியாக ரியா சுமன் இணைந்துள்ளார். பொலிடிகல் திரில்லராக  தயாராகவுள்ள இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கின்றனர். நவீன் குமார் செய்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாக உள்ளது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் முதல் பாடல் வரும் 25-ம் தேதி வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.